குஜராத்தில் ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து
1 min read
Massive explosion at a chemical plant in Gujarat
16/9/2026
குஜராத்தில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் நாளை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் வக்ரா பகுதியில் தொழிற்பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த தொழிற்பூங்காவில் ரசாயன ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ரசாயன ஆலையில் இன்று வழக்கம்போல் 8 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஆலையில் இருந்து வேகமாக வெளியேறினர்.
இந்த தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ரசாயன ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.