வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா கட்சியின் 7 தலைவர்களுக்கு மரண தண்டனை
1 min read
Death sentences imposed on seven leaders of Sheikh Hasina’s party in Bangladesh.
16/9/2026
வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு, அரசு வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய மக்கள் புரட்சியாக வெடித்தது. அந்த ஜூலை புரட்சியின்போது, அப்போ தைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு, ராணுவத்தையும், போலீசாரை யும் கொண்டு போராட்டக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முயன்றது. இந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைகளில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட அப்பாவி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பெரும் மக்கள் கொந்தளிப்பால், கடந்த 2024 ஆகஸ்டு 5-ந் தேதி அன்று ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு உயிருக்கு பயந்து இந்தியாவுக்கு தப்பி ஓடினார்.
அதன்பின்னர் அங்கு அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையில் புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்த வன்முறை மற்றும் மனிதநேயமற்ற குற்றங்கள் குறித்து விசாரிக்க அமைக் கப்பட்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை நடை பெற்று வந்தது.ஏற்கனவே கடந்த 2025 நவம்பரில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வுக்கு இந்த தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தி ருந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், வன்முறையைத் தூண்டியதா கத் தொடரப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பை நீதிபதி முகமது நஸ்ருல் இஸ்லாம் சவுத்ரி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு செவ்வாய் அன்று வெளியிட்டது.
அப்போது, கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாத நிலையிலும், வன்முறையை ஏவிவிட்ட குற்றத்துக்காக அவாமி லீக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் மந்திரியுமான ஓபைதுல் காதர். இணைப் பொதுச்செயலாளர் பஹாதுதீன் நசீம், முன்னாள் செய்தித்துறை மந்திரி முகமது அலி அராபத் மற்றும் அக்கட்சியின் இளைஞர் தலைவர் ஷேக் பஸ்லே ஷம்ஸ் பராஷ், அதன் பொதுச்செயலாளர் மைனுல் ஹெசைன்கான் நிகில், மாணவர் அணி தலைவர் சதாம் உசேன், அதன் பொதுச்செயலாளர் ஷேக்வாலி ஆசிப்இனான் ஆகிய 7 முக்கிய மூத்த தலைவர்களுக்கு அதிரடியாக மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாணவர்களை ஒடுக்க ரகசியக் கூட்டங்களை நடத்தியதும், ஊடகங்களை முடக்க முயன்றதும் கோர்ட்டில்நிரூபிக்கப்பட் டதால் இந்த உச்சக்கட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தலைமறை வாக உள்ள இந்த 7 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்ப வம் சர்வதேச அரங்கிலும், வங்காளதேச அரசியலிலும் தற்போது பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.