September 20, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்

1 min read

Grand Consecration Ceremony at Madurai Meenakshi Amman Temple

17.9.2026
மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார். இ.எம். சுதர்சன நாச்சியப்பனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஏரியூர். எம்.ஏ.,பி.எல்., படித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.

காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1999ல் மக்களவைக்கு சிவகங்கை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறைத் தலைவராகவும், 2002-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 2003-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும், 2004-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 2004-ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். மாநிலங்களவை தலைமைக் கொறடாவாக பணியாற்றி, மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *