September 19, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் சமுதாய வளைகாப்பு விழா- ஆட்சியர் பங்கேற்பு

1 min read

Community Baby Shower Ceremony in Courtallam – Collector Participates

18/9/2026
தென்காசி மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது .

இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலைக் கதிரவன் ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிதியாண்டு 2026-27 சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வட்டாரத்திற்கு 100 கர்ப்பிணி பெண்கள் வீதம் மாவட்டத்திலுள்ள வட்டாரங்களுக்கு 300 கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்பட உள்ளது.

இதன் முதல் கட்டமாக இன்றைய தினம் செங்கோட்டை மற்றும் தென்காசி வட்டாரத்தை சேர்ந்த 200 கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இச்சமுதாய வளைகாப்பின் முக்கிய நோக்கம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டும் என்பதே ஆகும். கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதற்கு அறிவுறுத்தல்,சுகாதார ஆலோசனைகள் வழங்குதல் போன்றவை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்கள் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு எடுத்துரைக்கப்படும். மேலும் அவர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் மூலம் சீதனப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

இச்சமுதாய வளைகாப்பு விழாவில் திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மா.முத்து மாரியப்பன், வட்டார ஒருங்கிணைப்பு அலுவலர்கள். கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *