தென்காசி மாவட்ட வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம்
1 min read
Tenkasi District Bankers’ Review Committee Meeting
18.9.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2026-27ஆம் நிதியாண்டின் 2ஆம் காலாண்டிற்கான மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத் சிங், தலைமையில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தின் வருடாந்திர கடன் திட்டம் 2026-27 மற்றும் 2ஆம் காலாண்டில் வங்கிகளின் கடன் வழங்கல் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.நிர்ணயிக்கப்
பட்ட காலாண்டு இலக்குகளை வங்கிகள் எட்டியுள்ளமை குறித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத் சிங், பாராட்டுத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தொடர உதவும் வகையில், 24 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.1.40 கோடி மதிப்பிலான கல்விக் கடன் அனுமதி ஆணைகள் வழங்கினார்.
மேலும், தொழில் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில், 16 பயனாளிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பிலான முத்ரா கடன் அனுமதி ஆணைகளையும் வழங்கினார். மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.248 கோடி மதிப்பிலான கடன் அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன.
மேலும், “யுவா கனெக்ட் முன்முயற்சி பிரச்சாரமானது 02.10.2026 முதல் அனைத்து பொதுத்துறை வங்கிகளாலும் தொடங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இம்முயற்சியின் கீழ், கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு உயர்கல்விக்கான கல்விக் கடன் வசதிகள், தகுதி, விண்ணப்பிக்கும் நடைமுறை மற்றும் உயர்கல்விக்காக கிடைக்கக்கூடிய இதர நிதி உதவிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
அரசின் இம்முயற்சிக்கு இணங்க, அனைத்து பொதுத்துறை வங்கிகளும் கனெக்ட் பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கேற்று, கல்லூரி மாணவர்களிடையே கல்விக் கடன் தொடர்பான போதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, தகுதியான மாணவர்கள் கல்விக்
கடன் வசதிகளை எளிதில் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத் சிங், அறிவுறுத்தினார்.
மேலும், பல்வேறு அரசு சார்ந்த கடன் மற்றும் மானியத் திட்டங்களின் கீழ் சிறப்பாக கடன் வழங்கி சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய 9 வங்கி கிளை மேலாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத் சிங், வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் கடன் வசதிகளை விரிவுபடுத்துதல், கல்விக் கடன், முத்ரா கடன் மற்றும் அரசு சார்ந்த கடன் திட்டங்களை தகுதியான பயனாளிகளுக்கு உரிய காலத்தில் சென்றடையச் செய்தல் ஆகியவற்றில் வங்கிகளும் அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வருடாந்திர கடன் திட்ட இலக்குகளை அடைவதில் வங்கிகள் மேற்கொண்டுள்ள பணிகளை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், பாராட்டியதுடன், வரும் காலங்களிலும் தகுதியான பயனாளிகளுக்கு விரைவாகவும் உரிய முறையிலும் கடன் வழங்குவதன் மூலம் தென்காசி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிக்குமாறு வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் டாக்டர் தண்டபாணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் ஆர். பரமேஸ்வரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னோடி மாவட்ட அலுவலர் வம்சி ரெட்டி, மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் மாரியம்மாள், இயக்குநர் தியாகராஜன், தாட்கோ மேலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.