September 20, 2026

Seithi Saral

Tamil News Channel

ம.பி. பெட்ரோல் பங்குகளில் ரூ.2,000-க்கு மேல் யு.பி.ஐ பரிவர்த்த்னை கிடையாது என அறிவிப்பு

1 min read

Announcement: No UPI transactions above Rs.2,000 at petrol pumps in Madhya Pradesh.

19/9/2026
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் ஒரு அதிரடியான கூட்டு முடிவை அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4,700 பெட்ரோல் பங்குகளிலும் ஒரே நேரத்தில் அமலுக்கு வர உள்ளது.

சமீபத்தில் குறிப்பிட்ட தொகையைத் தாண்டும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர். கட்டணம் அல்லது சேவை வரி விதிக்கப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்கும் போது அவர்களுக்குக் கூடுதல் நிதி இழப்பு மற்றும் லாப வரம்பில் பெரிய பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் போடும் வாகன ஓட்டிகள் பொதுவாகப் பெரிய தொகையை யு.பி.ஐ. மூலம் செலுத்தி வந்த நிலையில், இந்த புதிய கட்டுப்பாடு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மத்திய அரசு இந்த எம்.டி.ஆர். வரி விதிப்பு முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் மத்திய அரசுக்குக் கடுமையான கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு இந்த முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், அக்டோபர் 16 முதல் வாடிக்கையாளர்கள் ரூ.2,000-க்கு மேல் பெட்ரோல் போட ரொக்கப் பணத்தையோ அல்லது பிற வழிமுறைகளையோ மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *