புளியங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி; ஆய்வாளர் சஸ்பெண்டு
1 min read
Worker dies of electrocution near Puliyangudi; Inspector suspended
19/9/2026
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த தாற்காலிக மின் பணியாளர் வியாழக்கிழமை இறந்த நிலையில் மின் பாதை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருமலாபுரம் அருளாச்சி இந்திராநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34) .புளியங்குடி மின் வாரியத்தில் தாற்காலிகமாக பணியாற்றி வந்தார். புதன்கிழமை அவரும், மின் பாதை ஆய்வாளர் இசக்கியும் புன்னையாபுரம் முந்தல் சாலையிலுள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய சென்றனர்.
அப்பொழுது இசக்கி, அந்த மின்மாற்றிக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்துவதற்கு பதிலாக தவறாக வேறு மின்மாற்றிக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்தி விட்டாராம். அதையறியாத மணிகண்டன் மின்மாற்றியில் ஏறி பழுதை சரி செய்ய முயன்றுள்ளார். அப்பொழுது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தார்,
இந்நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்த மின் பாதை ஆய்வாளர் இசக்கியை சஸ்பெண்ட் செய்ய கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் உத்தரவி்ட்டதையடுத்து உதவிப்பொறியாளர் ஜேசுதாஸ் இசக்கியை சஸ்பெண்ட் செய்தார்.