இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை; அன்புமணி அறிவிப்பு
1 min read
No support for anyone in the by-election; Anbumani announces.
18.9.2026
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் பாமக ஆதரவு அளிக்கவில்லை என்று அக்கட்சித் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, வரும் அக். 6ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், தவெக, திமுக, அதிமுக, கம்யூ., நாம் தமிழர் கட்சிகள் களமிறங்கி உள்ளன.கடந்த சட்டசபை தேர்தலின் போது கூட்டணியில் இருந்ததால், தங்களுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறிவந்தார். பாமகவின் ஆதரவை பெற தவெகவும் முயற்சித்து வந்தது.
இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவது இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி தெ ரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பாமக மாநில நிர்வாகிகள், இரு தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு யாருக்கும் ஆதரவு இல்லை என்ற முடிவை எடுத்து உள்ளதாக கூறியுள்ளார்.