“திமுக – அதிமுகவும் இணைந்து ஒரு கூத்து பண்ணுறாங்க” விஜய் தாக்கு
1 min read
“DMK and AIADMK are also forming a conspiracy,” Vijay attacks
25/9/2026
‘ஊழல் செய்த கூட்டத்தை விட மாட்டோம். இனிமேல் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது,’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது;
108 இடங்களை வென்ற நாம் தான் ஆட்சியமைக்கணும். ஆனால், திமுக – அதிமுகவும் இணைந்து ஒரு கூத்து பண்ணுனாங்களே பாருங்க. மற்றும் பலர் (அதிமுக) பாஜவுடைய ஒரு பிரிவு. ஆனால், திமுகவின் கிளை கழகமாக இப்போது மாறிவிட்டதாக நான் சொல்லவில்லை.
பெரிய பெரிய தலைவர்கள் சொல்கிறார்கள். அவர்களை பொறுத்த வரையில், அனுபவம் என்று சொல்லி மக்கள் காசை கொள்ளையடிக்கலாமாம். ஆனால், நம்மைப் போன்ற சாதாரண குடும்பத்தில் இருந்து சமானிய கட்சி ஆட்சிக்கு வரக் கூடாதாமா?
ஏனெனில் ஊழல் செய்ய முடியாது. மக்கள் பணத்தை தொட முடியாது. தொட்டால் மாட்டிக் கொள்வார்கள் என்று தெரியும். இதனால், நாம் வரக் கூடாது என்று இருவரும் மாறி மாறி திட்டம் போட்டார்கள்.
மக்கள் காசை தொட மாட்டோம். தொடவும் விட மாட்டோம். தொட்டவர்களையும் விட மாட்டோம். அதனால் தான் சட்டசபையில் அந்த காலத்தில் நடந்த ஊழல்கள் அனைத்தையும் எடுத்து சொன்னோம். ஊழல் என்று சட்டசபையில் சொன்னால், ஆதாரத்தை காட்டு என்பார்கள். ஆதாரத்தை காட்டினால், நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்பார்கள். உடனே அதுக்கு வேறு ஏதாவது சொன்னால், நீதிமன்றத்தில் இருப்பதை இங்கு பேசக் கூடாது என்பார்கள்.
சட்டசபையில் பேசக்கூடாது என்பது தான் திமுகவின் நோக்கம். அதனால் தான் நான் கத்த வேண்டியதாக இருக்கிறது. ’50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஊழல் எல்லாம், இப்போதைய தலைமுறையினருக்கு தெரியாதே? நாம் ஊழலற்றவர்கள், ஊழலற்றவர்கள் என்று தானே ஓட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த விஜய் என்னடா பழைய கதை எல்லாம் எடுத்து பேசுகிறான்,’ என்று நம்மை பற்றி அவதூறாக பேசுவது தான்.
35 ஆண்டுகளாக இதைப் பார்த்து விட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். இது எல்லாம் புதுதி கிடையாது. எனக்கு இன்னும் பத்தவில்லை. நிறைய வேண்டும் என்று தான் எனக்கு இருக்கிறது.
ஊழல் செய்த கூட்டத்தை விட மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் சாருக்கும், திமுகவுக்கு சொல்லிக் கொள்கிறேன். இனிமேல் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. மக்கள் காசை தொட்டதே இல்லை என்று சொல்ல முடியுமா? இனிமேலும் மக்கள் காசை தொடவே மாட்டோம் என்று உங்களால் சொல்ல முடியுமா?, ஊழல் செய்ய மாட்டோம் என்று சொல்ல முடியுமா? அரசியலுக்கு வருவதற்கு முன்பும் ,பின்பும் உள்ள சொத்துக் கணக்கை காட்ட முடியுமா?
மு.க.ஸ்டாலின் தோற்றாலும் ஜெயித்தாலும் அவர் தான் என் ‘ஸ்வீட்அங்கிள்’. தவெகவும், எங்களுக்கும் தான் போட்டி என்று திமுகவினரே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
இதுதான் வாழ்க்கை ஒரு வட்டம். நாங்கள் அரசியலுக்கு குழந்தை தான். தமிழக மக்களின் குழந்தை. ஆனால், சில பேர் பவள விழா கட்சியோடு பண்ணை வீட்டு குழந்தையா இஷ்டத்துக்கு உளறுகிறார்கள். நம்முடைய கேள்வியே ஸ்டாலினுக்கு மட்டும் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.