September 28, 2026

Seithi Saral

Tamil News Channel

சபரிமலையில் வெடி வழிபாடு ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு

1 min read

Devaswom decides to cancel firecracker offerings at Sabarimala

26.9.2026
கேரளம் மாநிலத்தில் உள்ள பல கோவில்களில் வெடி வழிபாடு (பட்டாசுகளை பயன்படுத்தும் வழிபாட்டு முறை) நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாக சபரிமலை போன்ற காட்டுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் பண்டைய காலங்களில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த வன விலங்குகளை விரட்டுவதற்காகவும், தொடர்ச்சியாக சத்தத்தை எழுப்புவதற்காகவும், பட்டாசு வெடிக்கும் பழக்கம் அறிமுகமானது.

பிற்காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கான பொருட்செலவு, நிதி சுமை காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டணம் செலுத்தி வெடிக்கும் சடங்கு தொடங்கியது. அதுவே பிற்காலங்களில் வெடி வழிபாடாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சபரிமலையில் நூற்றாண்டு காலமாக பின்பற்றி வந்த வெடி வழிபாட்டை ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஒவ்வொரு ஆண்டும் வெடி வழிபாடு நடத்த ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி ஏலம் எடுப்பவர்கள் வெடிமருந்து உபயோகம் தொடர்பான சான்றிதழை சமர்ப்பித்து வெடி வழிபாட்டை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் வனத்துறையினரின் அறிவுறுத்தல், வனவிலங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் வெடி வழிபாட்டை ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வெடி வழிபாட்டுக்கான ஏல நடவடிக்கைளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *