September 28, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆர்டிஐ சட்டத்தில் சட்டம் ஒழுங்கு விலக்கு: உத்தரவை வாபஸ் பெற்றது தமிழக அரசு

1 min read

Exemption for law and order under RTI Act: Tamil Nadu government withdraws order.

27.9.2026
சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்களை இனி ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்ற அரசாணையை கடும் எதிர்ப்பை தொடர்ந்து வாபஸ் பெற்றது தமிழக அரசு.
சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொதுத்துறையானது, உளவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமைப்பு என்பதால், தகவல் உரிமைச்சட்டம் அதற்கு பொருந்தாது என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதன்படி, சாதி மற்றும் சமூக மோதல்கள், காவல்துறை துப்பாக்கிச் சூடு, காவல் சித்ரவதை மற்றும் காவலில் ஏற்படும் மரணங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தமிழக வெற்றிக்கழகத்தின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் இந்த உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தின. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். தற்போது ஆர்டிஐ சட்டத்தில் சட்டம் ஒழுங்கு விலக்கு உத்தரவை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *