September 28, 2026

Seithi Saral

Tamil News Channel

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ரஷ்யா ஆதரவு

1 min read

Russia supports India becoming a permanent member of the UN Security Council.

27.9.2026
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் 81வது பொதுச்சபைக் கூட்டம் நடந்து வருகிறது. இதன் உயர்மட்ட கூட்டத்தில் உலக தலைவர்கள் சிறப்புரையாற்றி வருகின்றனர்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று பேசியதாவது:

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் பிரதிநிதித்துவ விரிவாக்கத்தில் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா பிராந்தியங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த உலகளாவிய அமைப்பின் எந்தவொரு சீர்திருத்தத்திலும் வளரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்குவதை ஏற்க முடியதாது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் கோரிக்கையை இந்தியாவும், பிரேசிலும் முன்வைத்துள்ளன. இதற்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்பதை மீண்டும் உறுதிபட கூறுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கான முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவுகள் பெருகி வருகின்றன. போர்ச்சுகல், மொரீஷியஸ் நாடுகளும் தங்கள் ஆதரவை இந்தியாவுக்கு தெரிவித்துள்ளன.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளும், இரண்டாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *