September 27, 2026

Seithi Saral

Tamil News Channel

மணிப்பூரில் நாகா சமூகத்தினர் 2 பேர் சுட்டுக்கொலை

1 min read

Two members of the Naga community shot dead in Manipur.

27/9/2026
மணிப்பூரில் கிராம தலைவரின் வீட்டுக்குள் புகுந்து நாகா சமூகத்தினர் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மணிப்பூர் மாநிலம் சேனாபதி மாவட்டத்தில் உள்ள காலென்ஜாங் கிராமத்தில் நாகா மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்குள் நேற்று மதியம் பயங்கரவாத கும்பல் ஒன்று அதிரடியாக ஒரு வீட்டுக்குள் புகுந்தது.அது கிராம தலைவரின் வீடு என கூறப்படுகிறது. அந்த கும்பல், வீட்டில் இருந்த 4 பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இதில் ராக்கி மற்றும் குமார் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். அடானி மானியோ (வயது 33), ஆஷிஹோ சானி (வயது 49) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இந்த கொலை சம்பவத்துக்கு மணிப்பூர் முதல்-மந்திரி ஒய்.கெம்சந்த் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்லூரி ஒன்றின் வெள்ளி விழா கொண்டாட்டத்திற்காக முதல்-மந்திரி சிங் சென்றுள்ளார். அவர் இருந்த மாவோ பகுதியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 3 நாட்களில் நடந்த 2-வது சம்பவம் இதுவாகும். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் இந்தோ-மியான்மர் எல்லை பகுதியில் மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டத்தில் பிலாங் கிராமத்தில் அண்டை நாடான மியான்மரை சேர்ந்த கிளர்ச்சி குழுவினர் திடீரென ஆயுதங்களுடன் புகுந்தனர். அவர்கள் கிராமவாசிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்ச்சியாக, 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்த அவர்கள், நாகா சமூகத்தினர் ஆவர்.

இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. தாக்குதலை நடத்தியவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அதனுடன், உபா சட்டம் மற்றும் ஆயுத சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி கெம்சந்த் சிங் கண்டனம் வெளியிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக நாகா சமூகத்தினர் தரப்பில், 24 மணிநேர கடையடைப்பு போராட்டம்

கடந்த மே மாதத்தில் 6 நாகா சமூக மக்கள் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அந்த சமூகத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. துணை முதல்-மந்திரி பதவி விலகவும், நாகா சமூகத்தினர் 6 பேர் படுகொலைக்கு நீதி கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சமரச முயற்சியாக, மாநில மற்றும் மத்திய அரசுகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *