September 26, 2026

Seithi Saral

Tamil News Channel

உண்ணி காய்ச்சல் பரவல்- தென்காசி ஆட்சியர் எச்சரிக்கை

1 min read

Spread of tick fever – Tenkasi Collector issues warning.

26.9.2026
தமிழகத்தில் சில இடங்களில்
“ஸ்கிரப் டைபஸ்” எனும் உண்ணி காய்ச்சல் அச்சுறுத்தி வருவதால், பூச்சிகள் கடித்தால் அலட்சியம் செய்ய வேண்டாம் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

டெங்கு. ப்ளு, காய்ச்சலை தொடர்ந்து ‘ஸ்கிரப் டைபஸ் எனும் உண்ணி காய்ச்சலும், சில பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வருவதால், பூச்சிகள் கடித்தால் அலட்சியம் செய்ய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

ஸ்கிரப் டைபஸ்” என்பது ஒரு வகை பாக்டீரியா தொற்று. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் மனிதர்களை கடிப்பதால் உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட மனிதனிடமிருந்து மற்றொரு மனிதர்களுக்கு பரவாது.

ஸ்கிரப் டைபஸ் ” பாதிப்பு ஏற்பட்டால் பூச்சி கடித்த இடத்தில் சிவப்பு சிவப்பாக சிறிய தடிப்பு ஏற்படும். தலைவலி, குளிர்காய்ச்சல் போன்ற ஆரம்ப அறிகுறிகளும், உடல்வலி, தோல் அரிப்பு, இருமல், மூச்சுத்திணறல் ஆகிய தீவிர அறிகுறிகள் இருக்கும். ஆரம்பத்தில் கண்டறியாமல் அலட்சியப்படுத்தினால், பூச்சி கடித்த இடத்தில் இரத்தகட்டு ஏற்பட்டு, உள்ளுறுப்புகள் செயலிழக்கும். மேலும், இதன் வாயிலாக கோமா, மரணம் உள்ளிட்ட தீவிர பிரச்சனை உருவாகும்.

எனவே, காய்ச்சல் ஏற்பட்ட உடன் அல்லது உடலில் சிவப்பு நிற தடிப்புகள் ஏற்பட்டவுடன் தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பொது மக்கள் தங்கள் வீட்டை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். புதர்மண்டிய இடங்கள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் போது பூச்சிகள், ஒட்டுண்ணிகள் உடல் மீது படாதவாறு தற்காத்து கொள்வது அவசியம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். அறிவுறுத்தியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *