ஆவுடையானூரில் 6 ஆயிரம் வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம்!
1 min read
6,000 bundles of straw destroyed by fire near Pavoorchatram!
30.9.2026
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் அடுக்கி வைக்கப்பட் டிருந்த 6000 க்கும் அதிகமான வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசமானது.
தென்காசி மாவட்டம் ஆவுடையானூரைச் சேர்ந்த முருகன் (வயது 54), தனக்குச் சொந்தமான இரும்பு ஷெட்டில் விற்பனைக்காக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைக்கோல் கட் டுகளை அடுக்கி வைத்திருந்தார்.
இந்நிலையில் அந்த பகுதியில் கிடந்த குப்பைகளுக்கு அடையாளம் தெரியாத நபர் தீ வைத்ததாகக் கூறப்ப டுகிறது. குப்பையில் பற்றிய தீ, பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த வைக்கோல் கட்டுகளுக்குப் பரவியது. அடுத்தடுத்து வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றி மளமள வென எரியத் தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளூர் மக்கள்தீயை அணைக்க முயன்றும் தீயின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே உடனடியாக இதுகுறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தென்காசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டனர்.
எனினும், தொழுவத்தில் இருந்த அனைத்து வைக்கோல் கட்டுகளும் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.தீ விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகே குடியிருப்பு வீடுகள் இருப்பதால், தீ மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கும் வகையில் பாவூர்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு ஒரு வைக் கோல் கட்டு சுமார் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுவதால், எரிந்து நாசமான வைக்கோல்களின் மதிப்பு ரூ.15 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.