October 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி, நெல்லை 9 மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் 19-ந் தேதியுடன் நிறைவு

1 min read


The term of office for local body representatives in the nine districts, including Tenkasi and Nellai, concludes on the 19th

6.10.2026
தமிழகத்தில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் வரும் 19-ம் தேதியுடன் நிறைவடைவதால், அந்த இடங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து நிலையிலும் வார்டு உறுப்பினர் முதல் தலைவர்கள் வரை மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனர்.

இந்த சூழலில், மாநில அளவில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2025 ஜனவரி 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அந்த இடங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவிக் காலம் அக்.19-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து 9 மாவட்ட ஊராட்சி, 74 ஊராட்சி ஒன்றியம், 2,901 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 27,003 பேரின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த இடங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் பரிந்துரைப்படி நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த 9 மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் மண்டல சேர்மன் பதவிக்காலம் 2027 மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *