October 7, 2026

Seithi Saral

Tamil News Channel

இடைத்தேர்தலில் தாராபுரம் 80.31%, மதுராந்தகம் 85.97 % ஓட்டுப் பதிவு

1 min read


Voter turnout in the by-elections: 80.31% in Dharapuram and 85.97% in Maduranthakam

6.10.2026
மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு நிறைவில் 85.97 சதவிகித வாக்குகளும், தாராபுரத்தில் 80.31 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரலில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அ.தி.மு.க.சார்பில் வெற்றி பெற்ற மரகதம் கும் ரவேல், சத்தியபாமா ஆகி யோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 முதல் 16-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடந்தது.

மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (த.வெ.க.), பரந்தாமன் (தி.மு.க.), கணிதா சம்பத் (அ.தி. மு.க.), சுகந்தி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி) மற்றும் சுயேட்சைகள் உள்பட 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தாராபுரம் தொகு தியில் சத்தியபாமா (த. வெ.க.),சுகன்யா(தி.மு.க.), பானுமதி (அ.தி.மு.க.),லட் சுமணன் (இந்திய கம்யூ னிஸ்டு கட்சி), கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) மற்றும் சுயேட்சைகள் உள்பட 22 பேர்களம் காண்கின்றனர். இந்தத் தொகுதிகளில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு

நிறைவு பெற்றது. 2 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை அசம்பாவிதமின்றி நிறைவு பெற்றது.

இந்தநிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு சதவிகித விவரங்கள் வெளியாகியுள்ளன. மதுராந்தகம்,தாராபுரம் தொகுதிகளில் பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் மொத்த நிலவரப்படி 80.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலின்போது தாராபுரத்தில் 6 மணி நிலவரப்படி 89.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், மொத்தம் 85.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 92.28 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இந்த தேர்தலில் 6.38 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் வருகிற வெள்ளிக்கிழமை எண்ணப்படுகின்றன

தட்டாஞ்சாவடி

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பின் தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கியது.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் (அசோக் ஆனந்த்), காங்கிரஸ் (விநாயகம்), தி.மு.க. (சேது செல்வம்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சலீம்), நாம் தமிழர் கட்சி (கார்த்திக் குமாரி), இந்திய குடியரசு கட்சி (கலைவாணன்) என 6 பேர் அரசியல் கட்சிகள் சார்பிலும், 5 பேர் சுயேச்சையாகவும் என மொத்தம் 11 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தட்டாஞ்சாவடியில் 80.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. எனினும், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில், இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை விட 6.29 சதவீதம் இது குறைவு ஆகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *