October 6, 2026

Seithi Saral

Tamil News Channel

நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி: வாலிபர் கைது

1 min read


Young man arrested for Rs 34 lakh fraud under the pretext of procuring land.

6.10.2026

நாகர்கோவிலில் நிலம் வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.34 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குளப்பாக்கம், ஊனமாஞ்சேரியில் வசித்து வருபவர் ஜெயந்தி (வயது 58). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

அவர், கட்டையன்விளையில் தனக்கு சுமார் 11 சென்ட் காலி மனை இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் கூறினார். பின்னர் 11 சென்ட் நிலத்துக்கு ரூ.1.38 கோடி கொடுத்தால் நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறினார். இதை நம்பிய நான் முதற்கட்டமாக ரூ.34 லட்சம் கொடுத்தேன்.

இதைத்தொடர்ந்து நிலத்தை நேரில் பார்க்க வந்தபோது அந்த நிலம் காந்திக்கு சொந்தமானது இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர், அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டதும் தெரியவந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த நான் பணத்தை திருப்பிக்கேட்டேன். ஆனால் அவர் தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவுக்கு, சூப்பிரண்டு அன்சுல் நாகர் உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம் சுந்தர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து காந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *