தாய் பைக் வாங்கி கொடுக்காததால் விஷம் குடித்த வாலிபர் உயிரிழப்பு
1 min read
Young man dies after consuming poison because his mother refused to buy him a bike.
6.10.2026
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் தாயார் பைக் வாங்கி கொடுக்காததால் மனவேதனையில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் புதுநகரைச் சேர்ந்த விநாயகர் மகன் பொன்மாரீஸ் (வயது 26). இவர் தனது தாயாரிடம் பைக் வாங்கித் தரும்படி கேட்டாராம். அதற்கு தாயார் தற்போது பண வசதி இல்லை, பின்னர் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பொன்மாரீஸ் கலைக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தாராம். இதைப் பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.