October 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன்-விருதுநகர் ஆட்சியர் தகவல்

1 min read

Bank loans with subsidies for entrepreneurs – Information from Virudhunagar Collector

13.10.2026
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் தொழில் முனைவோர் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது.

லோடு ஆட்டோ, கார், பயணிகள் ஆட்டோ, ஜெராக்ஸ் கடை, வெல்டிங், சென்ட்ரிங், டிபார்மென்ட் ஸ்டோர், கார்மென்ட்ஸ், அரிசிகடை, ஆவின் பாலகம், எலெக்ட்ரிக்கல்ஸ், பிரவுசிங் சென்டர், பியூட்டி பார்லர் மற்றும் பிற தொழில்கள் இதுபோன்ற வெற்றி தொழில் முனைவோர் திட்டத்தில் திட்ட மதிப்பு தொகையில் 35% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்.

மேலும், ஆதிதிராவிடர்களுக்கான முன்னேற்ற திட்டத்தில் (PM-AJAY) ஆடு மற்றும் மாடு வளர்ப்பதற்கு திட்ட மதிப்பு தொகையில் 50% அல்லது ரூ.50,000/- இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படும்.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் தவணைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6% வட்டி மானியமாக வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தில் தொழில் முனைவோர்களாக விருப்பமுள்ளவர்கள் தாட்கோ இணையதள முகவரியில் (https://newscheme.tahdco.com) விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *