October 13, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகரில் 16-ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

1 min read

Private sector job fair in Virudhunagar on the 16th.

13.10.2026

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.
அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 16.10.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், சாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் அடையார் ஆனந்த பவன், அபிஸ் ஃபுட்ஸ் அண்ட் புரோட்டின்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ ராம் மோட்டார்ஸ், பெஸ்ட் மணி கோல்ட் பிரைவேட் லிமிடெட், ஃப்ளேர்மேக்செல் போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, தொழிற்படிப்பு, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள் 16.10.2026 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in (தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம்) என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ், அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது 9360171161 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *