October 15, 2026

Seithi Saral

Tamil News Channel

ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 51 இந்தியர்கள் பலி; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min read

51 Indians recruited into the Russian army killed; Supreme Court issues directive to the Central Government

15.10.2026
ரஷியா-உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு ரஷிய அரசிடம் இருந்து இழப்பீடு கிடைப்பதை உறுதிசெய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இதுதொடர்பான மனுக்கள் மீது நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 267 இந்தியர்கள் வேலை என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், 51 பேர் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 139 பேர் தூதரக அளவிலான முயற்சி மூலம் பாதுகாப்பாகத் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், மற்ற 77 பேர் காணாமல் போயுள்ளதாகவும் ரஷிய ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இழப்பீடு கோரி விண்ணப்பிக்க, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விளம்பரம் அளிக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், “பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்கள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்பட வேண்டும்.

இந்த உதவியானது, இழப்பீடு கோருவதற்கும், டிஎன்ஏ சோதனைகள் தொடர்பான சிக்கலான ஆவணங்களைத் தயாரிப்பதற்கும், உடல்களைத் தாயகம் கொண்டு வருவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஆறு இழப்பீட்டுக் கோரிக்கைகள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், டிஎன்ஏ அடையாளங்காணலில் ஏற்படும் தாமதங்கள் பல சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த மோசடியான ஆட்சேர்ப்பு வலையமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் ராஜதந்திர முயற்சிகள் குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் வெளியுறவுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *