October 18, 2026

Seithi Saral

Tamil News Channel

அப்துல் கலாம் நெறிமுறை-அரசியல் மையம்; அண்ணாமலை திறந்து வைத்தார்

1 min read

Abdul Kalam Centre for Ethics and Politics; inaugurated by Annamalai

15/10/2026
‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் சார்பில் கோவையில் “அப்துல் கலாம் நெறிமுறை மற்றும் அரசியல் மையத்தை அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக ‘வீ த லீடர்ஸ்’ இயக்க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பெருமதிப்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளான இன்று, அவரது கனவுகளையும் சிந்தனைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில், “அப்துல் கலாம் நெறிமுறை மற்றும் அரசியல் மையம்” இன்று தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. இந்த மாபெரும் நிகழ்வில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் போர்ப்படையான இந்திய தேசிய ராணுவத்தின் மூத்த வீரர் மாதவன் பிள்ளை, ரூட்ஸ் குழுமத்தின் தலைவர் கே.ராமசாமி, கலாமின் குடும்ப உறுப்பினர்கள் ஏ.பி.ஜே ஜெய்னுலாபிதீன் மரைக்காயர் மற்றும் ஏ.பி.ஜே.எம்.ஜே ஷேக் சலீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அரசியல் என்பது அதிகாரத்திற்கான பாதையல்ல.. அறநெறி, நேர்மை, மக்கள் சேவை ஆகியவற்றின் அடிப்படையில் சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவி என்பதை இளைஞர்களுக்கு உணர்த்துவதே இந்த மையத்தின் நோக்கம். டாக்டர் அப்துல் கலாம் கனவு கண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, அறிவும் அறமும் பொதுவாழ்வில் இணைந்து பயணிக்க வேண்டும். அவரது பிறந்தநாளில் தொடங்கப்படும் இந்த முயற்சி, நேர்மையான அரசியலையும் பொறுப்புள்ள தலைமைத்துவத்தையும் உருவாக்கும் ஒரு புதிய தொடக்கமாக அமையட்டும்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *