புளியங்குடி அருகே கோழி பண்ணையில் பட்டாசு வெடி மருந்து குடோன்- 3 பேர் கைது
1 min read
Firecracker explosive material godown found at a poultry farm near Puliyangudi; 3 people arrested
15/10/2026
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே அனுமதி இன்றி கோழிப்பண்ணையில் மூன்று ஆண்டுகளாக செயல்பட்ட பட்டாசு வெடி மருந்து குடோன் பல லட்சம் மதிப்புள்ள வெடி மருந்து பறிமுதல் செய்து தீயணைப்புத்துறை உதவியுடன் காவல்துறை அழித்தனர் மூன்று பேர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம்
புளியங்குடி சங்கரன்கோவில் புளியங்குடி சாலையில் புத்தர் கோவில் அருகே அனுமதி இன்றி கோழி பண்ணையில் பல நாட்களாக செயல்பட்ட பட்டாசு வெடிமருந்து குடோனில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள வெடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அளித்தனர்
கடந்த சில நாட்களாக புளியங்குடி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் புளியங்குடி போலீசார் கண்காணித்து வந்த நிலையில்
இதனடையில்
சங்கரன்கோவில் சாலையில் புத்தர் கோவில் அருகே உள்ள கோழிப்பண்ணையில் வெடி மருந்து குடோன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்குமார் மற்றும் போலீசார்
சங்கரன்கோவில் சாலையில் புத்தர் கோவில் அருகே வீரியிருப்பு பகுதியை ச் சேர்ந்த லட்சுமணனுக்கு சொந்தமான புத்தர் கோவில் அருகே கோழிப்பண்ணையில்
சோதனை செய்தபோது பல லட்சம் மதிப்புள்ள வெடி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து
வீரியிருப்பு பகுதியைச் சேர்ந்த
கருப்பன் மகன் லட்சுமணன்,வெம்பக்கோட்டைசயை சேர்ந்த மாரிமுத்து மகன் மகேந்திரன்( 23) சிவகாசி திருத்தங்களை சேர்ந்த சக்தி மகன் அல்லிமுத்து வயசு (42 )
ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் சிவகாசியில் இருந்து வெடி பொருள்களை கொண்டு வந்து சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரித்து இங்கே இருந்து மீண்டும் சிவகாசிக்கு பார்சல் செய்து அனுப்புவது வழக்கமாக உள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது இதனை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர் சுமார் 400 கிலோ மதிப்புள்ள வெடிபொருளையும் வருவாய்த்துறை தீயணைப்பு துறை முன்னிலையில் அளிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது சட்ட விரோதமாக புளியங்குடி அருகே பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது