தென்காசி: மானிய விலையில் நெல், விவசாய கருவி ஆட்சியர் வழங்கினார்
1 min read
Tenkasi: Collector distributes paddy and agricultural implements at a subsidized price
17.10.2026
தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் 2026-2027 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை ஒத்திசைவு செய்யப்பட்ட நெல் 7033 ஹெக்டர், சிறுதானியங்கள் 4664 ஹெக்டர். பயறு வகைகள் 545 ஹெக்டேர் பருத்தி -805 கரும்பு 1325 ஹெக்டர், எண்ணெய் வித்து 1499 ஹெக்டேர், பழங்கள் 10444 , காய்கறிகள் – 3139 ஹெக்டேர், மலைப்பயிர்கள் 14378 ஹெக்டேர், பூக்கள் -726 ஹெக்டேர், வாசனைப் பயிர்கள் 709 ஹெக்டேர். மருத்துவப் பயிர்கள் 26 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மழையளவு, நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
வேளாண்மை துறை மூலம் தென்காசி வட்டார வேளாண்மை துறையினரால் ஒரு பயனாளிக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.350/-மானியத்தில் சீவன் சம்பா நெல் விதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. அட்மா திட்டத்தின் கீழ் தலா ஒரு பயனாளிக்கு ரூ.6000/-மானியத்தில் புல் வெட்டும் கருவி மற்றும் ரூ. 6000/- மானியத்தில் நேரடி நெல் விதைப்பு கருவி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் முனைவர்
ர.ராஜ்மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் மா. வீராசாமி, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, முனைவர் ஆ.இரா. சிவராமன், வேளாண்மை இணை இயக்குநர்(பொ.) ச. கனகம்மாள், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கு. நரசிம்மன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இரா.வெங்கடலட்சுமி, இயக்குநர். தோட்டக்கலை துணை ஜெஸிமா பானு, துணை இயக்குநர், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் வசந்தி, வேளாண் பொறியியல் துறை, செயற்பொறியாளர், நாகராஜன் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 205 மனுக்களுக்கு 10 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், அறிவுறுத்தினார்.