October 17, 2026

Seithi Saral

Tamil News Channel

ரவணசமுத்திரத்தில் மூன்றரை வயது பெண் குழந்தை ஆற்றில் மூழ்கி பலி

1 min read

Three-and-a-half-year-old girl drowns in a river at Ravanasamudram

17/10/2026
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள இரவண சமுத்திரத்தில் மூன்றரை வயது பெண் குழந்தை வீட்டின் அருகேயுள்ள ஆற்றில் மூழ்கி பலியானது.
இரவணசமுத்திரம் சொசைட்டி தெருவை சேர்ந்தவர் ரசூல் மைதீன். இவரது மகள் அஹமது ஹாஜிரா என்ற மூன்றரை வயது பெண் குழந்தை நேற்று மாலை 4.30 மணியிலிருந்து காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி குழந்தையை காணவில்லை என்பதால் கடையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர்கள் கிளாட்சன் ஜோஸ், அதியமான், பாவூச்சத்திரம் காவல் ஆய்வாளர் வேல்கனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு வீட்டின் அருகே உள்ள ஆற்றில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆற்றில் இருளில் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் அதிகமாக அடர்ந்து காணப்பட்டதாலும் இரவு நேரமானதாலும் குழந்தையை தேடுவதில் தாமதம் ஏற்பட்டது. இரவு 9 மணி அளவில் காணாமல் போன குழந்தை அகமது ஹாஜிராவை இறந்த நிலையில் ஆற்றிலிருந்து தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
இதுகுறித்து கடையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாடசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *