October 18, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர் மாவட்டம்: நெடுஞ்சாலைப் பணிகளை ஆட்சித்தலைவர் ஆய்வு

1 min read

Virudhunagar District: District Collector inspects highway works

17/10/2026
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் முதல் இராஜபாளையம் வரையிலான பழைய தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் சூலக்கரை வரை நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி, இன்று(17.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 744-இல் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் அழகாபுரி முதல் இராஜபாளையம் வரையிலான சாலைப் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன.

இதன் தொடர்ச்சியாக, வழிவிடு முருகன் கோவில், மூவரைவென்றான் பகுதிகளில் கைவிடப்பட்ட பழைய சாலைகள், கிருஷ்ணன்கோவில் முதல் இராஜபாளையம் வரையிலான சுமார் 26.685 கிலோமீட்டர் நீளமுள்ள பழைய சாலைகள் மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு, ஒப்படைக்கப்படவுள்ள பழைய சாலைகளின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள், சாலைப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் பொதுமக்கள் தடையின்றிப் பாதுகாப்பாகப் பயணிப்பதற்குத் தேவையான வசதிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகளை தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சூலக்கரையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு, பணிகளை சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி குறித்த காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நெடுஞ்சாலையோரப் பகுதிகளில் சிலர் குப்பைகள் மற்றும் கழிவுநீரைக் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதால், இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக, தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *