October 17, 2026

Seithi Saral

Tamil News Channel

இசையமைப்பாளர் தேவா காலமானார்- முதல்-அமைச்சர் விஜய் அஞ்சலி

1 min read


Music composer Deva passes away – Chief Minister Vijay pays tribute

17.10.2026

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தேவா. மனசுக்கேத்த மகராசா என்ற படத்தின் மூலம் 1989ம் ஆண்டு இசையமைப்பாளர் அறிமுகமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட 450 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர் தேவா. தன்னுடைய குரல் மற்றும் இசையினால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.
கடந்த சில தினங்களாக வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேவா, சிகிச்சைக்காக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
சொந்த ஊரில் நாளை (அக்,18) இறுதிச்சடங்குகள் நடக்கின்றன. அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவா வீட்டிற்கு நேரில் வந்த முதல்-அமைச்சர் விஜய் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, தேவா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *