October 18, 2026

Seithi Saral

Tamil News Channel

நகை பறிப்பு புகார்: யூடியூபர் மதுமிதா நாளை ஆஜராக போலீசார் சம்மன்

1 min read

Jewelry snatching complaint: Police issue summons to YouTuber Madhumitha to appear tomorrow

18.10.2026
நெல்லையில் காண்டிராக்டரிடம் 5 சவரன் நகை பறித்த புகாரின் பேரில் யூடியூபர் மதுமிதா நாளை பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நாகர்கோவில் அருகே உள்ள தம்புக்கோணம் அனந்த நாடார்புரத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளை போன வழக்கில், காண்டிராக்டர் பேச்சிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்புக்கோணம் அனந்தநாடார்புரத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 98 சவரன் நகைகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், மதுமிதா மீது நெல்லை கே. டி. சி. நகரைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 35) என்ற காண்ட்ராக்டர் கடந்த 2022-ம் ஆண்டு மதுமிதா தன்னிடமிருந்து 5 சவரன் நகையைப் பறித்துச் சென்றதாக ராஜக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். நகை பறிப்பு சம்பவம் நடந்த திருநெல்வேலி மாவட்டம் உத்தமபாண்டியன்குளம் பகுதியானது பாளை தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதால், வழக்கு அங்கு மாற்றப்பட்டது.

பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முதுகுவலி சிகிச்சைக்காக பிசியோதெரபிக்கு சென்றபோது மதுமிதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. 2022-ம் ஆண்டு உத்தமபாண்டியன்குளம் விலக்கு பகுதியில் காரில் மசாஜ் செய்தபோது மதுமிதா 5 சவரன் நகையை எடுத்துச் சென்றார் என காண்ட்ராக்டர் பேச்சிமுத்து குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் மதுமிதாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்த போலீசார் நாளை (அக்டோபர் 19) பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *