October 18, 2026

Seithi Saral

Tamil News Channel

வத்திராயிருப்பில் 21, 22-ந் தேதி “உங்களை தேடி உங்கள் ஊரில்”முகாம்- ஆட்சியர் தகவல்

1 min read

“Seeking You in Your Town” camp to be held in Vathirayiruppu on the 21st and 22nd – Collector’s announcement

18.10.2026

18.10.2026
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது 21.10.2026 அன்று காலை 09.00 மணி முதல் மறுநாள் 22.10.2026 அன்று காலை 09.00 மணி வரை நடைபெறவுள்ளது.
21.10.2026 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி சென்றடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, 21.10.2026 மதியம் 02.30 மணிக்கு வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் வைத்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 04.00 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.
எனவே, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அரசு அலுவலர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட வழிவகை செய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *