கோவில் நிலத்தை தமிழக அரசு தானமாக பெற முடியாது- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
1 min read
Tamil Nadu government cannot acquire temple land as a donation – Supreme Court’s landmark verdict
18.10.2026
ஈரோடு மாவட்டம் கொடுமுடி கிராமத்தில் உள்ள நாகபாளையம் மாரியம்மன்-பொன்னாச்சியம் மன் கோவிலுக்குச் சொந்தமான 1 ஏக்கர் 10 சென்ட் நிலத்தை, தாலுகா அலுவலகம் கட்ட தற்காலிக அறங்காவலர் அரசுக்கு தானமாக வழங்கினார்.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா. அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு, தற்காலிக அறங்காவலர் ஒருவரிடம் இருந்து கோவில் சொத்துகளை அரசு தானமாக பெறுவது சட்டப்படி செல்லாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கினர்.
மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “மத அல்லது அறக்கட்டளை நிறுவனங்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள மாநில அரசு, அதன் பாதுகாவலராக செயல்படும் நிலையில், அவற்றின் சொத்துகளை தன்னிச்சையாக கையகப்படுத்தவோ அல்லது தனது அதிகாரிகளை அவ்வாறு செய்ய அனும திக்கவோ கூடாது.
பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் மற்றும் மன்னர்களால் வழங்கப்பட்ட கோவில் சொத்துகள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தம். அதன் மீது தானம் வழங்கியவருக்கோ. அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை” என்று குறிப்பிட்டனர்.
மேலும், தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட தானப் பத்திரம் செல்லாது என அறிவித்த நீதிபதிகள், மாநில அரசு 8 வாரத்திற்குள் கோவிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு தொகை வழங்க வேண்டும் என்று உத் தரவிட்டனர்.