October 19, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக அஞ்சல் வட்டத்தில் புதிதாக புதுச்சேரி மண்டலம் உருவாக்கம்

1 min read

New Puducherry Region created within the Tamil Nadu Postal Circle

19.10.2026
தபால் துறையில் நிர்வாக திறனை மேம்படுத்துவதற்காக, சென்னை மண்டல கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரியை பிரித்து தனியாக, ‘புதுச்சேரி’ மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அஞ்சல் வட்டம், சென்னை, மேற்கு -– கோவை, தெற்கு – மதுரை, மத்தி – திருச்சி என, நான்கு மண்டலமாக செயல்பட்டு வந்தது. அதன் நிர்வாகம், மண்டல அஞ்சல்துறை தலைவர் தலைமை யில் தனித்தனியே மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, அஞ்சல்துறையில் மேற்கொண்ட மறுசீரமைப்பு, நிர்வாகத்திறனை மேம்படுத்துதல், வணிக வளர்ச்சி மற்றும் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், சென்னை மண்டல கட்டுப்பாடில் இருந்த புதுச்சேரியை பிரித்து, புதிதாக புதுச்சேரி மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, தமிழக அஞ்சல் வட்டத்தில், மண்டல எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. புதுச்சேரி மண்டல கட்டுப்பாடில், செங்கல்பட்டு, புதுச்சேரி, திருவண்ணாமலை, கடலுார், விருத்தாசலம் அஞ்சல் கோட்ட நிர்வாகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுதவிர, தற்போதைய தாம்பரம் அஞ்சல் கோட்டத்தை, இரண்டாக பிரித்து, புதிதாக அம்பத்துார் அஞ்சல் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட பகுதிகளை பிரித்து, மறுசீரமைப்பு மூலம், புதிதாக பெரம்பலுார் அஞ்சல் கோட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *