October 20, 2026

Seithi Saral

Tamil News Channel

சேவாலயாவில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டம்

1 min read

Celebration of Saraswati Puja and Ayudha Puja at Sevalaya

19.10.2026
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா மையத்தில் 19 அக்டோபர் 2026 அன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலைய ஆய்வாளர் ஜே.சி.சுரேஷ் பாபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் குத்துவிளக்கேற்றி வைத்து பூஜையில் கலந்து கொண்டார். மாணவர்கள், பெற்றோர்கள், சேவாலயா இல்ல முதியோர் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாணவர்களிடையே உரையாற்றிய சுரேஷ் பாபு, எதிர்காலத்தைச் சிறப்பாக அமைப்பதில் கல்வி மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சேவாலயாவின் 38 ஆண்டுகால சமூகப் பணிகளை எடுத்துரைக்கும் காணொலியைக் கண்டு, சேவாலயாவின் நீண்டகால சேவையைப் பாராட்டியதுடன், சமூக நலனுக்கு சேவாலயா தொடர்ந்து ஆற்றி வரும் பணிகளையும் பாராட்டினார்.
சேவாலயாவில் பணியாண்டை நிறைவு செய்த பணியாளர்களுக்கு வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.
முன்னதாக, சேவாலயாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வா.முரளிதரன் சிறப்பு விருந்தினரையும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். அவர் தனது உரையில், மகாகவி பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி, ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதே உண்மையான சரஸ்வதி பூஜை என்ற கருத்தை வலியுறுத்தினார்.
மாணவர்கள் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.
சேவாலயாவின் இல்லங்கள் துறைத் தலைவர் சங்கரபாண்டியன் நன்றி கூறினார். சேவாலயாவின் வளர்ச்சித்துறைத் தலைவர் கிங்ஸ்டன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
சேவாலயா 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஆகும். இந்தியா முழுவதும் 66 மையங்களில் செயல்பட்டு வரும் சேவாலயா, பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குகிறது. மேலும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் நடத்துகிறது. குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்கள், கோசாலைகள், இயற்கை விவசாய பண்ணைகள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களும் சேவாலயா மூலம் நடத்தப்படுகின்றன. இது தவிர, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு, பேரிடர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. சேவாலயாவின் அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. 38 ஆண்டுகளில் ஏறத்தாழ 20,00,000 பயனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்தில் சேவாலயா பங்காற்றியுள்ளது. மேலும் விவரங்களுக்கு / நன்கொடை வழங்க / தன்னார்வத் தொண்டு புரிய sevalaya.org என்ற இணையமுகவரியிலோ அல்லது 9677713448 என்ற எண்ணிலோ / வாட்சப் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *