குலசையில் மகிஷாசூரன் வதம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
1 min read
Mahishasura Vadham in Kulasekarapattinam: Hundreds of Thousands Participate
21.10.2026
குலசையில் நள்ளிரவு நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில், பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார், குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில், தசரா திருவிழா கடந்த, 11ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 10வது நாளான நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு கடற்கரை திடலில், சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதிக்கு வருகை தந்தார். கடற்கரையில் சூரசம்ஹாரத்தை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
அங்கு, தன் முகத்துடன் எதிர்கொண்ட மகிஷாசூரனை அம்மன் வதம் செய்தார். தொடர்ந்து சிங்கமுகம், மாட்டு தலை, சேவை உருவில் வந்த சூரனையும் வதம் செய்தார். அப்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேடமணிந்து வந்திருந்த பக்தர்கள், கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, இன்று காலை அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.