October 21, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் மறைவு; பிரதமர், துணை ஜனாதிபதி இரங்கல்

1 min read

Passing of Ummidi Ethiraj, who designed the ‘Sengol’ (sceptre); Prime Minister and Vice President express condolences

21.10.2026
வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்த கலைஞர் உம்மிடி எத்திராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது;-

உம்மிடி எத்திராஜ் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்த அவர், முன்னாள் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்தற்காக என்றுமே நினைவு கூரப்படுவார்.
பல ஆண்டுகள் கழித்து, 2023ம் ஆண்டு புதிய பார்லி. கட்டடத்தில் அந்த செங்கோலுக்கு உரிய கவுரவத்தை வழங்கி சிறப்பிக்கும் வாய்ப்பு அரசுக்கு கிடைத்தது. அப்போது உம்மிடி எத்திராஜை சந்தித்து, நாட்டிற்கும், அதன் கலாசாரத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி கூறும் பாக்கியம் கிடைத்தது. அவரது வாழ்க்கையும், கலைத்திறனும் நாட்டின் பாரம்பரிய தொடர்பை பிரதிபலிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-

நாட்டின் பாரம்பரிய புனித சின்னமான வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய உம்மிடி எத்திராஜ் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது இந்த முயற்சி என்றும் மரியாதையுடனும், நன்றி உணர்வுடனும் நினைவு கூரப்படும். கைவினைக் கலை மரபை பாதுகாப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பு விலைமதிப்பற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *