October 21, 2026

Seithi Saral

Tamil News Channel

‘பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு இந்த உலகத்தில் இடம் இருக்கக் கூடாது’ ராஜ்நாத் சிங் பேச்சு

1 min read

‘There should be no place in this world for supporters of terrorism,’ says Rajnath Singh

21.10.2026
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 2 நாட்கள் பயணமாக தஜிகிஸ் தான் நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு துஷான்பே நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசாங்க தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் கலந்து கொண்டார். அவர் முன்னிலையில், ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

“அமைதிக்கும். வளர்ச்சிக்கும் மிகத்தீவிரமான அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உருவெடுத்துள்ளது. பயங்கரவாதம், அப்பாவி மக்களுக்கு தீங்கு விளைவிப்பதுடன், முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை சீர்குலைக்கிறது.

பயங்கரவாதம், சமுதாயங்களை தீவிரமயமாக்குகிறது. இளைஞர்களுக்கு உரிய வாய்ப்புகளை பறிக்கிறது. பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. அதை அணுகுவதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியும், ஆதரவும், அடைக்கலமும் அளிப்பவர்களுக்கு இந்த உலகத்தில் இடம் இருக்கக்கூடாது. பயங்கரவாத சூழலை உறுதியாகவும், கூட்டாகவும் ஒழிக்க வேண்டும்.

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து பயங்கரவாதிகளின் ஆயுட்காலம் ஓராண்டுக்கும் கீழாக குறைந்துவிட்டது. அவர்கள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய ஓராண்டுக்குள் அவர் களை பாதுகாப்பு படையினர் தீர்த்துக்கட்டி விடுகிறார்கள்.

பன்முக வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக 2026-ம் ஆண்டில் இருந்து 2030-ம் ஆண்டு வரையிலான செயல் திட்டத்தை நிறைவேற்ற இந்தியா ஆதரவு அளிக்கிறது. எங்களது பொருளாதார தொடர்புகள், ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் பலன் அளிக்க வேண் டும் என்று விரும்புகிறோம். இன்னும் அதிகமான வினியோக சங்கிலித்தொடர்கள், வர்த்தகம். முதலீட்டை பெருக்குவதை நோக்கி நடைபோடுகிறோம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *