October 24, 2026

Seithi Saral

Tamil News Channel

துளசிமதி முருகேசனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

1 min read

Prime Minister Modi conveys wishes to Thulasimathi Murugesan

24.10.2026
ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த கடந்த 18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்தப் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் இரட்டை வெள்ளி, ஒரு தங்கம் வென்றுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவிலும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் துளசிமதி முருகேசன் வெள்ளி வென்றுள்ளார்.

ஆசிய பாரா விளையாட்டில் பாட்மின்டனில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் (24 வயது) ஒரு தங்கம், இரண்டு வெள்ளி வென்றதால், அவருக்கு ரூ. 1.25 கோடி ஊக்கத்தொகையை தவெக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில்,துளசிமதி முருகேசனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
ஆசிய பாரா விளையாட்டில் 3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசனின் வெற்றி இந்திய பேட்மிண்டனுக்கு பெருமை சேர்க்கும் தருணமாகும், வரும் காலங்களில் மேலும் பல வெற்றிகளை குவித்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *