October 28, 2026

Seithi Saral

Tamil News Channel

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது; தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

1 min read

A new low-pressure area is forming; possibility of moderate rain in Tamil Nadu

28/10/2026
வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும். தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், காரைக்கால், புதுச்சேரி ஓரிரு இடங்களில் இன்று (அக்டோபர் 28) முதல் நவ.,3ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நவ.,3ம் தேதி கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *