October 28, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒரு அறை தரைமட்டம்

1 min read

Explosion at a firecracker factory near Sivakasi: one room razed to the ground

28.10.2026
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்துக்குள்ளானதில் ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மம்சாபுரத்தில் வாரி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தது.

இதில், ஒரு அறை முற்றிலுமாக தரைமட்டமானது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உணவு இடைவேளை என்பதால் பணியாளர்கள் அறையை விட்டு வெளியே சென்றுள்ளனர். அந்தவேளை, வெடி விபத்து ஏற்பட்டதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *