October 31, 2026

Seithi Saral

Tamil News Channel

செஞ்சி சிறுமி வழக்கில் மர்மம் நீடிப்பு; உறவினரிடம் சிபிசிஐடி விசாரணை

1 min read

Mystery persists in the Gingee girl case; CB-CID questions a relative

29.10.2026
செஞ்சி சிறுமி வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. சிறுமி படித்த பள்ளி ஆசிரியர்கள், மூதாட்டி, மாப்பிள்ளை என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு- பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி. இவள், கடந்த 11-ந் தேதி மாலையில் தனது பிறந்த நாளை கொண்டாடி முடித்து விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலையில் அவளை திடீரென காணவில்லை.

சிறுமியை கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இவ் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து அவர்கள் 7-வது நாளான நேற்று 2-ம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார், 4 குழுக்களாக பிரிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையிலான போலீசார், நேரடியாக சிறுமி படித்த ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மாணவ- மாணவிகளின் வருகைப்பதிவேட்டை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் சிறுமி மாயமான சம்பவம் குறித்து ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி யின் பள்ளி நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர். அதுபோல் மற்றொரு குழுவினர். சிறுமியின் சகோதரி படித்து வரும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுமி மாயமான சம்பவம் குறித்து அவளது சகோதரியின் சக தோழிகளிடம் கேட்ட றிந்து விசாரணை நடத்தினர். இதுதவிர கண்காணிப்பு கேமரா பதிவுகள், சி.டி.ஆர். பதிவுகளை ஒரு குழுவினரும், மற் றொரு குழுவினர் செல்போன் டவர் தரவுகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கு நாளுக்கு நாள் பெரும் மர்ம கதையாக நீடித்துக்கொண்டிருக்கிறது. சிறுமி காணாமல் போனதாக கூறப் படும் 11-ந் தேதி இரவு அவள் தனியாக வேறு அறையில் தூங்கவில்லை. பெற்றோர் வடிவேலு, பவானி மற்றும் சிறு மியின் பாட்டி ஆகிய 3 பேருடன் ஒரே அறையில்தான் படுத்து தூங்கியுள்ளாள். நள்ளிரவில் சிறுமி மட்டும் எப்படி தனியாக எழுந்து வெளியே சென்றாள்? யாருக்கும் எந்தவித சத்தமும் கேட்கவில்லையா? அல்லது யாராவது கதவை திறந்து உள்ளே வந்து சிறுமியை தூக்கிச்சென்றார்களா? சிறுமியை பெற்றோர்களே மனமுவந்து தன் உறவினர்கள் யாருக்காவது தத்து கொடுத்தார்களா? அல்லது கிராம சாலைகள் வழியாக இருசக்கர வாகனத்தில் யாரேனும் ஆந் திரா அல்லது கர்நாடகாவிற்கு கடத்திச் சென்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், செஞ்சி சிறுமி மாயம்; காலையில் சிறுமியின் பக்கத்து வீட்டு மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். மாயமான சிறுமியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் வயல் வெளியில் தனியாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் மூதாட்டி மட்டும் உள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் மூதாட்டியின் வீட்டின் கதவு இருமுறை பலமாக தட்டப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த மூதாட்டி அச்சம் அடைந்தார். இன்று காலை அவர் தனது வீட்டின் கதவு தட்டப்பட்டது குறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், சிறுமியின் அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளையிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தினர்.

கடந்த 12 ஆம் தேதி சிறுமி காணாமல் போன நிலையில் பல்வேறு கோணங்களில் தொடரும் விசாரணை நடைபெற்று வருகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *