October 29, 2026

Seithi Saral

Tamil News Channel

543 புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடியாக குறைப்பு

1 min read

Prices of 543 cancer drugs slashed significantly

29.10.2026
இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலைகள் அதிகமாக உள்ளதால் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே மருந்துகளின் விலை நிர்ணயம் தொடர்பான மனுக்கள் மீது செவ்வாய் அன்று நடந்த விசாரணையில் உச்சநீதிமன்றம், “மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லரை விலைக்கும், மருந்து கடைகளுக்கு அவை விற்பனை செய்யப்படும் விலைக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக ஒட்டுமொத்த மருத்துவ துறையும் செயல்படுகிறதா?” என கேள்வி எழுப்பியது.

இந்நிலையில் 137 வகையான மொத்தம் 543 புற்றுநோய் மருந்துகளின் விலையை மத்திய அரசு 70 முதல் 93 சதவீதம் வரை குறைத்துள்ளது.

மத்திய அரசின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நேற்று வெளியிட்ட உத்தரவில் இந்த விலைக்குறைப்பு அடுத்த மாதம் 9ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விலை குறைக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலும் வெளியாகி உள்ளன.

அதில் குறிப்பாக, மார்பக புற்றுநோய் மருந்தான பல்போசிலெப் உடைய விலை ரூ. 69,852 இல் இருந்து ரூ. 13,512 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 100 எம்ஜி கீமோதெரபி ஊசியான தொடிபா விலை ரூ. 80,072 இல் இருந்து ரூ. 7,150 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

420 எம்ஜி புற்றுநோய் ஊசி பிரிடுசொம்பா விலை ரூ. 94,951 இல் இருந்து ரூ. 30,593 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

400 எம்ஜி புற்றுநோய் ஊசி பிவாசிசுமாப் ரூ. 69,852 இல் இருந்து ரூ. 13,512 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அபிரெட்ரோனி எனும் புரோஸ்டேட் (120) விலை ரூ. 28,000 இல் இருந்து ரூ. 4,840 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இரத்த புற்றுநோய் மருந்தான டசடினிப் ரூ. 17,811இல் இருந்த்து ரூ. 1,808 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஒட்டுமொத்தமாக புற்றுநோய் தொடர்பான 543 மருந்துகளின் விலை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக்குறைப்பால் நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இருப்பினும், ‘கீட்ரூடா’ மருந்தின் விலை ஒரு குப்பிக்கு, 2,16,500 ரூபாய் என்ற நிலை தொடர்கிறது.

ரிபோக்சிக்லிப், டாக்ரிசோ, டெசென்ட்ரிக், டார்சலெக்ஸ், இம்பின்ஸி உள்ளிட்ட சில முக்கிய மருந்துகளின் விலை மாற்றமின்றி நீடிக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *