October 30, 2026

Seithi Saral

Tamil News Channel

புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் இல்லை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

1 min read

No money for cancer treatment: 3 members of the same family die by suicide

30.10.2026
மும்பையை அடுத்த விரார் மேற்கு குளோபல் சிட்டி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ஒன்றில் இருந்து நேற்று இரவு 9.30 மணியளவில் பயங்கர துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஞ்ச் போலீசார், உள்புறமாக பூட்டப்பட்டி ருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது அங்கு ஒரே வீட்டில் வசித்து வந்த தீபக் மன்சுக்லால் மேத்தா (52) குமார் மன்சுக்லால் மேத்தா (வயது50) மற்றும் இவர்களது தங்கை கேவ்னா மன்சுக் லால் மேத்தா (48) ஆகிய 3 பேரும் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப் பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் உயிரிழந்தவர்களில் குமார் மன்சுக்லால் மேத்தா கடுமையான புற்றுநோ யால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கான மருத்துவ சிகிச்சைக்கு பணம் திரட்ட முடியாமல் இந்த குடும்பம் தவித்து வந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உதவி கேட்டும் பணம் கிடைக்காததால், ஒட்டுமொத்த குடும்பமும் கடுமையான மன அழுத்தத்தில் மூழ்கியது.
இதனால் ஏற்பட்ட விரக்தியில், 3 பேரும் ஒன்றாக சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, அவர்கள் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *