October 31, 2026

Seithi Saral

Tamil News Channel

கூட்டு பலாத்காரம் செய்த என்ஜினீயர்களை கடத்தி கொல்ல முயற்சி-காதல் ஜோடி உள்பட 11 பேர் கைது

1 min read

Attempt to kidnap and kill engineers who committed gang rape – 11 people, including a romantic couple, arrested

30.10.2026
பெங்களூருவில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 என்ஜினீயர்களை கடத்தி கொலை செய்ய முயன்ற காதல் ஜோடி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியைச் சேர்ந்த மகேந்திரா, தருண், மஞ்சு ஆகியோர் பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் மாரத்தஹள்ளியில் வாடகை வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தனர்.
கடந்த 24-ந்தேதி மஞ்சு சொந்த ஊருக்கு சென்றிருந்தபோது. அவரது நண்பர் ராஜ்குமார் (24), தனது 21 வயது காதலியுடன் அந்த வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த மகேந்திரா, தருண் ஆகியோர் ராஜ்குமாரை மற்றொரு அறையில் அடைத்து வைத்து, அவரது காதலியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது காதலன் ராஜ்குமாருடன் சேர்ந்து மஞ்சுவிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து மகேந்திரா, தருண் ஆகியோரை கடத்தி கொலை செய்து, அதை தற்கொலையாக சித்தரிக்க திட்டமிட்டனர். இதற்காக லோகநாத். சுகைல் உள்ளிட்ட சிலரின் உதவியையும் நாடினர்.

திட்டத்தின்படி, மஞ்சு அளித்த தகவலின்பேரில், அதிகாலை நேரத்தில் மகேந்திராவையும், பணிக்குச் சென்று திரும்பிய தருணையும் அந்த கும்பல் கடத்தியது. பின்னர் இருவரையும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கியதுடன், மகேந்திராவின் தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டலும் விடுத்தனர்.

இதுகுறித்து மகேந்திராவின் தந்தை அளித்த புகாரின்பேரில், மாரத்தஹள்ளி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். மஞ்சுவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது. பாலியல் பலாத்கார சம்பவமும், பழிவாங்கும் நோக்கில் நடந்த கடத்தல் திட்டமும் தெரியவந்தது.

இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் நாகரபாவியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அங்கு தாக்கப்பட்ட நிலையில் இருந்த மகேந்திரா, தருண் ஆகியோரை மீட்டனர். அவர்களை கொலை செய்து, சம்பவத்தை தற்கொலையாக சித்தரிக்கவும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் ராஜ்குமார், மஞ்சு, ராஜ்குமாரின் காதலி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக மகேந்திரா, தருண் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *