தென்காசி கோவில் தேரோட்டம்
1 min read
Tenkasi Temple Chariot Procession
4.11.2026
தென்காசி அருள்மிகு உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்..
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 26-ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படி தீபாரதனையும், இரவில் சுவாமி – அம்பாள் வீதி உலாவும் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு காலை 8.20 மணிக்கு மேல் அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடந்தது. இந்த ஆண்டு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்பாள் தேர் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் சுவாமி தேரில் அம்பாள் எழுந்தருளினார்.
தொடர்ந்து 9 மணிக்கு தேரோட்டம் நடந்தது. பூஜைகளை குரு சிதம்பரகிருஷ்ணன் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். சிவனடியார்களின் சிவபூத கணவாத்தியங்களும் இசைக்கப்பட்டன.
தேரை அறங்காவலர் குழு தலைவர் ஒய். பாலகிருஷ்ணன், தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.
தேரோட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர் பொன்னி,
ஆய்வர் கலாமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முருகேசன், புவிதா, ஷீலா குமார், மூக்கன்,
மணியம் செந்தில்குமார், பூக்கடை மாணிக்கம்பிள்ளை, திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையா பாண்டியன், அகஸ்தியர் சத்சன் மார்க்க சபை முத்துக்குமாரசாமி, பாஜக நகர தலைவர் noசங்கரசுப்பிரமணியன்,
மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், ஆன்மீக பிரிவு வெங்கடாச்சலம்,
ராஜ்குமார், கருப்பசாமி, மந்திரமூர்த்தி, விஸ்வநாதன்,
கவுன்சிலர்கள் லட்சுமண பெருமாள், மகேஸ்வரன், ஜெயலெட்சுமி, சுப்பிரமணியன்,
குருசாமி, உமா மகேஸ்வரன்,
பூமாதேவி முருகன்,
இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து, நகர தலைவர் லட்சுமி நாராயணன்,
திமுக நிர்வாகிகள் பாலாமணி,
சங்கரன் வாத்தியார், ராஜேந்திரன், தங்கபாண்டியன், சோமசுந்தரம், , சூர்யா மணி என்ற ஈஸ்வரன், பால்ராஜ், ராம்துரை, கல்யாணி, பொத்தைமுருகன், இசக்கி, சபரிசங்கர், சங்கர்ராஜன், பாட்டபத்து சரவணன், அறங்காவலர் இசக்கிரவி,
அதிமுக நகர செயலாளர் சுடலை, முருகன்ராஜ், முத்துக்குமாரசாமி, ஸ்டீல் மாரியப்பன், மாரிமுத்து, அண்ணா தொழிற்சங்கம் சுப்புராஜ், சிந்தாமணி காமராஜ்,
வட்டார காங்கிரஸ் தலைவர் குற்றாலம் பெருமாள், நகர தலைவர் கண்ணன், மாடசாமி ஜோதிடர், ஈஸ்வரன், வைகை குமார், ட்ரெஸ்ஸில் மேலாளர் கங்காதரன், சிவனடியார்கள் செண்பகராமன், முத்துராஜ் கார்த்திக் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 5ம் தேதி காலை 9.10 மணிக்கு மேல் யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடக்கிறது. மாலை 6.05 மணிக்கு மேல் தெற்கு மாசி வீதியில் வைத்து காசி விசுவநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுத்தல் நடக்கிறது. அன்று இரவு 9.10 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரோஜாலி சுமதா,
அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி, ஆய்வர் கலாமணி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முருகேசன், புவிதா, ஷீலாகுமார், மூக்கன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி அதியமான், இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் தலைமையிலான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு வீரர்கள் செய்திருந்தனர்..