November 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.4,000 லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது.

1 min read

Village Administrative Officer arrested near Kadayam for taking a bribe of Rs. 4,000 to process a land record (patta) transfer.

4.11.2026
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பட்டா மாற்றுவதற்காக ரூ.4,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

வடமலைப்பட்டி கிராமத்தில் உள்ள வெங்கடாம்பட்டி பகுதி-2 கிராம நிர்வாக அலுவலகத்தில் சேர்மபாண்டி என்பவர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், லெட்சுமியூரைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் தனக்குச் சொந்தமான இரண்டரை சென்ட் வீட்டுமனைக்கான கூட்டுப் பட்டாவை தனிப்பட்டாவாக மாற்றுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் சேர்மபாண்டியை அணுகியுள்ளார்.அப்போது, பட்டாவை மாற்றித் தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வளவு தொகை கொடுக்க இயலாது என தாமோதரன் தெரிவித்ததையடுத்து, பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரூ.4 ஆயிரம் பெற்றுக்கொள்ள சேர்மபாண்டி சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தாமோதரன் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தாமோதரன் செவ்வாய்க்கிழமை கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து சேர்மபாண்டியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பால்சுதர் தலைமையிலான போலீஸார், லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சேர்மபாண்டியை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். பட்டா மாற்றுவதற்காக லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *