November 7, 2026

Seithi Saral

Tamil News Channel

விவசாயிகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி; முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

1 min read

Crop loans of up to Rs. 75,000 each for farmers to be waived; Chief Minister Vijay issues order

7.11.2026

விவசாயிகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழக முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. இந்த பயிர்க்கடன்களை தமிழக அரசு அவ்வப்போது தள்ளுபடி செய்து வருகிறது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழக முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில்,
கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கு பாகுபாடின்றி ரூ. 75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

தள்ளுபடிக்கு தகுதியான பயிர்க்கடன்களுக்கான காலவரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிக்கப்படுகிறது.

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக அரசு ஒட்டுமொத்தமாக ரூ. 9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *