November 7, 2026

Seithi Saral

Tamil News Channel

திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவை கலைப்பு

1 min read

Tamil Nadu government dissolves high-level committee set up during DMK regime

7.11.2026
கடந்த திமுக ஆட்சியில் மத்திய-மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது; இக்குழுவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அசோக்வர்தன் ஷெட்டி, முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
இந்த குழுவை தவெக அரசு கலைத்து உத்தரவிட்டது.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” மாநில உரிமைகளுக்கு தடை? சினிமா திரையரங்க உரிமைகளுக்கு தடையில்லையா?” என குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன், புதிதாக தமிழ் திரைப்படங்களை வெளியிடும் நாட்களில் இருந்து ஒரு வாரத்திற்கு தினமும் காலை 6 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 2.30 மணி வரை 6 காட்சி திரையிட, தமிழக அரசு அனுமதி அளித்து இருந்ததை ஸ்டாலின் குறிப்பிட்டு கடுமையாக சாடியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *