November 9, 2026

Seithi Saral

Tamil News Channel

சுரண்டை அருகே எரிந்த நிலையில் பெண்பிணம்: கணவர், கொழுந்தன், மாமியார் கைது

1 min read

Woman’s charred body found near Surandai; husband, brother-in-law, and mother-in-law arrested

7.11.2026
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே கடையநல்லூர்- சுரண்டை சுந்தரபாண்டிபுரம் செல்லும் சாலை அருகே சுந்தர் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற தொழிலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்
உடனே இது குறித்து தோட்டத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார் அவர் சுரண்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார்,இன்ஸ்பெக்டர்
சுரேஷ்குமார் தடயவியல் துறை ,வருவாய் ஆய்வாளர் முருகேஸ்வரிஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஆலங்குளம் டிஎஸ்பி தலைமையில் 3 தனி படைகள் அமைக்கப்பட்டது.

அதில் கடையம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் போலீசார்‌ அடங்கிய 3 தனி படைகள்‌ இறந்தது யார் எந்த ஊரைச் சேர்ந்த பெண் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் சுரண்டை சாலை சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்
இதில் எரித்துக் கொல்லப்பட்டது குட்டிமாரி என்பது தெரிய வந்தது
கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த குட்டிமாரி அவருடைய கணவர் முருகன் ,குட்டி மாரியின் கொழுந்தன் ரவி, மாமியார் சிவகாமி ஆகியோர் தெருத்தெருவாக சென்று துணி வியாபாரங்களை செய்து வருகின்றனர். வியாபாரத்திற்காக சுரண்டையில் ஒரு விடுதியில் ரூம் எடுத்து தங்கி துணி வியாபாரம் செய்து வருகின்றனர்.

குட்டி மாரி கடையநல்லூரில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார் .இதில் குட்டி மாரிக்கும் அதே பகுதியில் உள்ள உள்ள ஒருவருக்கும் நீண்ட காலம் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது

இது கணவர் முருகனுக்கு தெரிந்து கள்ளக்காதலை கைவிடுமாறு தனது மனைவி குட்டி மாரி இடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இந்த விஷயம் முருகனின் தம்பி ரவிக்கு தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடையநல்லூரில் இருந்து கணவர் தங்கி வியாபாரம் செய்யும் சுரண்டையில் உள்ள தங்கும் விடுதிக்கு குட்டி மாரி வந்து உள்ளார். அப்பொழுது அங்கே இருந்த கொழுந்தன் ரவிக்கும் குட்டிமாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் வாக்குவாதம் முற்றவே ரவி அண்ணியின் கழுத்தில் துணியை வைத்து இறுக்கி கொலை செய்துள்ளார். சிறிது நேரத்தில் தங்கம் விடுதிக்கு வந்த அண்ணன் முருகன், தாய் சிவகாமி, ஆகியோரிடம் ரவி தான் குட்டிமாரியை கொலை செய்து விட்டதாக கூறினார். உடனடியாக கொலையை மறைப்பதற்கு இரவு நேரத்தில் குட்டிமாரியின் உடலை மோட்டார் சைக்கிளில் மூன்று பேரும் எடுத்துக் கொண்டு சுந்தராபாண்டிபுரம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள வாழை தோப்பில் வைத்து தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

இது குறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் வழக்கு பதிவு செய்து முருகன் ரவி சிவகாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டி மாரியின் இரண்டு குழந்தைகளும் தாய் இறந்ததும், தந்தை ஜெயிலுக்கு சென்றதும் தெரியாமல் தீபாவளி நேரத்தில் பரிதவித்து கொண்டிருக்கிறது.
அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரின் தீவிர விசாரணையில் கொலைக்கான காரணமும், குற்றவாளிகளும் கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *