November 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து வருவாய் ஆய்வாளர் தற்கொலை

1 min read

Revenue inspector dies by suicide after lying on railway tracks near Tenkasi

7.11.2026
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து வருவாய் ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு வந்த பயணிகள் ரயில் தென்காசி – கீழப்புலியூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து இருந்த நபர் மீது ரயில் ஏறியது இதில் அவரது உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில்வே சார்பு ஆய்வாளர் கற்பக விநாயகம் தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டவர் தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் புலிக்குட்டி விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சார்ந்த ராஜு என்பவரது மகன் திருப்பதி (வயது 48) என்பதும் இவர் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் முன் படுத்து தற்கொலை செய்து கொண்ட வருவாய் ஆய்வாளர் திருப்பதிக்கு முத்துலட்சுமி (வயது 39) என்ற மனைவி உள்ளார் அவர் தென்காசி உதவி தொடக்க கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர்களுக்கு 13, மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட திருப்பதிக்கும் அவரது மனைவிக்கு இடையில் குடும்பத் தகராறு இருந்துள்ளது இதனால் மனமுடைந்த திருப்பதி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *