பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜான் ஹாரிசன் புக்கர் பரிசை வென்றார்
1 min read
British author John Harrison won the Booker Prize.
10.11.2026
இலக்கியத்துக்கான உயரிய கவுரவங்களில் ஒன்றாகக் கருதப்படும் புக்கர் பரிசு இங்கிலாந்து அரசாங்கத்தால் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் நாடுகளுக்கு வழங்கப்பட்ட இந்த விருது தற்போது உலக நாடுகளில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜான் ஹாரிசன் எழுதிய தி எண்ட் ஆப் எவ்ரிதிங் என்னும் நாவலுக்கு வழங்கப்பட்டது.
லண்டனில் அவருக்கு புக்கர் பரிசுக்கான நினைவுச் சின்ன கோப்பையும், ரூ.50 ஆயிரம் பவுண்டுகள் மதிப்பிலான காசோலையும் வழங்கப்பட்டது.